தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.
இந்நிலையில் சற்று முன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது .அரசு மருத்துவர், ஒரு தடயவியல் மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது .இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஒருவாரத்துக்கு 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்ட நிலையில் உத்தரவிட்டுள்ளது. தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேதப் பரிசோதனை செய்தால் தடயங்கள் அழிக்கப்படும் என்று வழக்கறிஞர் சங்கரசுப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…