தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட படு கொலை- வைகோ குற்றச்சாட்டு!
பிரதமர் மோடியின் கைப்பாவையாக எடப்பாடி அரசு செயல்படுகிறது.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகம்.
கோவில்பட்டிக்கு கலெக்டரை அனுப்பி விட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். சாதாரண உடையில் இருந்த போலீசார், நவீன ரக துப்பாக்கியால் பொதுமக்களை குறிபார்த்து சுட்டுள்ளனர். மகளுக்கு சோறு கொண்டு சென்ற அப்பாவி பெண்ணையும் சுட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு தாக்கப்பட்டது என்று சொன்னார்கள். ஆனால் ஒரு சேதமும் ஏற்படவில்லை. ஒரு போலீசாருக்காவது பலத்த காயம் உள்ளதா?. போலீசாரே வாகனங்களுக்கு தீவைத்து உள்ளனர். திட்டமிட்டு சுடுவதற்கு உத்தரவிட்டுவிட்டு, தாசில்தார் மீது பழிபோடுகிறார்கள். மக்கள் உள்ளம் எரிமலை. அது வெளிப்பட்டே தீரும். மக்களின் கொந்தளிப்பினால் அமைச்சர்கள் ஊருக்கள் செல்ல முடியாது. போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது கண்துடைப்பு நாடகம். அன்று நான் போட்ட வழக்கில் ஜெயலலிதா இதே போன்று உத்தரவிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு ஆலையை செயல்பட உத்தரவிட்டது. இந்த அரசு முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு உறுதுணையாக உள்ளது என்று வைக்கோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.