தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் கோரிய வழக்கில் உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது .அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…