இன்று சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானத்தை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைத்தொடர்ந்து அவர் புறக்கணித்தார்.
பின்னர் செய்தியாளர் களிடத்தில் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் படுகொலையை கண்டிக்கும் வகையில் சட்டமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நானும் சபாநாயகரிடம் மன அளித்தேன். அவர் எனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. எனவே, நான் கண்டித்து அவை நடவடிக்கைகளை புறக்கணித்திருக்கின்றேன். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 04-07-2017 அன்று சட்டமன்றத்தில் நான் பேசினேன். ஸ்டெர்லைட் ஆலை எனது சொந்த மாவட்டத்தில் உள்ளது. அந்த மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் நூறாவது நாளில் ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று 13 பேரை துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்திருக் கிறார்கள்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இசக்கி முத்து என்கிற 10-வது படிக்கும் மாணவன் என்னிடம் நான் போராட்டத்திற்கு செல்ல வில்லை. ஆனால், அங்கிருந்த என்னை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற் சித்தார்கள் என்று கூறினார்.
இத்தனை நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் நேற்று திடீரென்று மூடுவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது கண்துடைப்பு வேலை. அமைச்சரவையை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு இவர்களே வழிகாட்டுகிறார்கள். அதி.மு.க. அரசு மக்கள் விரோத ஆட்சியாக மக்களுக்கு எதிராகவே செயல்படு கிறது. இறந்தவர்களை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. இன்று அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்.எல்ஏ.க்களும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். 13 பேர் கொல்லப்பட்டதற்கு சிறிதும் அவர்களுக்கு கவலை யில்லை. எனது சொந்த மாவட்டத்திலுள்ள நிலையை பற்றி பேச கூட சபாநாயகர் அனுமதிக்காததது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், சட்டமன்ற வளாகத்தின் வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…