தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் மகளிர் தினம் மற்றும் மே தினத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் செவிலியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், தூத்துக்குடி சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று பேசினார். அமைச்சரின் இத்தகைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய அவர், எங்களுடைய வனத்துறையில் தேர்வு ஆணையம் போல தேர்வு வைத்து 1800 பேருக்கு தகுதியின் அடிப்படையில் லஞ்சம் லாவண்யம் என்ற பிரச்சனை எழாமல் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் உள்ள பிரதிநிதிகள் தூத்தக்குடி சம்பவம் காரணமாக பேருந்துகள் வராததால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தலைவர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி சம்பவம் எதிர்பாராத விதமாக நடைபெற்ற சம்பவம். அதிலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிற போது இது போன்ற இக்கட்டான நிலை ஏற்படும் என கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…