தூத்துக்குடி துப்பாக்கி சூடு:சம்பவம் குறித்து கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்-அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு..!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் மகளிர் தினம் மற்றும் மே தினத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் செவிலியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், தூத்துக்குடி சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று பேசினார். அமைச்சரின் இத்தகைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய அவர், எங்களுடைய வனத்துறையில் தேர்வு ஆணையம் போல தேர்வு வைத்து 1800 பேருக்கு தகுதியின் அடிப்படையில் லஞ்சம் லாவண்யம் என்ற பிரச்சனை எழாமல் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் உள்ள பிரதிநிதிகள் தூத்தக்குடி சம்பவம் காரணமாக பேருந்துகள் வராததால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தலைவர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி சம்பவம் எதிர்பாராத விதமாக நடைபெற்ற சம்பவம். அதிலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிற போது இது போன்ற இக்கட்டான நிலை ஏற்படும் என கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்