தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு :CBI விசாரிக்க மனு மீது..! தமிழக அரசு -CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Published by
kavitha

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்வம் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்கு, தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர், உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.  அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், கலவரத்திற்கு பின்னர், தமிழ்நாடு அரசால் முடக்கப்பட்ட இணையதள சேவையை மீண்டும் வழங்க வேண்டும், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விடுமுறைகால சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, இணையதள சேவை முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாபவும், மாணவர்கள் தவித்து வருவதாகவும் மனுதாரர் கூறினார்.

அப்போது, அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், தற்போது, தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும், நேற்று உயர் அதிகாரிகள், தூத்துக்குடி மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும்,தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இயல்புநிலை திரும்பிவிட்டதாக அரசு தெரிவிப்பது உண்மையானால், ஏன் இணையதள சேவை முடக்கத்தை ஏன் நீக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர்.. இதனைத் தொடர்ந்து,  சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

85 பேர் பலி.! பதைபதைக்க வைக்கும் தென் கொரியா விமான விபத்து காட்சிகள்…

85 பேர் பலி.! பதைபதைக்க வைக்கும் தென் கொரியா விமான விபத்து காட்சிகள்…

முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…

4 minutes ago

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

13 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

14 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

15 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

15 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

16 hours ago