தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு :CBI விசாரிக்க மனு மீது..! தமிழக அரசு -CBI பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்வம் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்கு, தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர், உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், கலவரத்திற்கு பின்னர், தமிழ்நாடு அரசால் முடக்கப்பட்ட இணையதள சேவையை மீண்டும் வழங்க வேண்டும், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விடுமுறைகால சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, இணையதள சேவை முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாபவும், மாணவர்கள் தவித்து வருவதாகவும் மனுதாரர் கூறினார்.
அப்போது, அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், தற்போது, தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும், நேற்று உயர் அதிகாரிகள், தூத்துக்குடி மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும்,தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இயல்புநிலை திரும்பிவிட்டதாக அரசு தெரிவிப்பது உண்மையானால், ஏன் இணையதள சேவை முடக்கத்தை ஏன் நீக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர்.. இதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்