தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு..!! குறித்த அனைத்து மனுக்கள் மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணை..!!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து மனுக்களும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை இன்று விசாரணைக்கு வருகின்றன.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் 8 பேர் உட்பட பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் பல முக்கியக் கோரிக்கைகளும் இந்த மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, தூத்துக்குடி கலவரம் தொடர்பான அனைத்து மனுக்களும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்