தூத்துக்குடி துப்பாக்கி சூடு..!!அமைதி திரும்ப கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்..!!ராமதாஸ்

Default Image
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதி திரும்ப கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் பதற்றமான நிலைமையை கட்டுப்படுத்த மத்திய துணை ராணுவம்  வரவழைக்கப்படவிருப்பதாக செய்திகள் திட்டமிட்டு கசியவிடப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் அச்சமடைவார்கள் என்பது அரசின் எண்ணமாக இருக்கலாம்.

ஆனால், ஏற்கனவே ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையால் உயிர்களையும், உரிமைகளையும் இழந்து கொந்தளித்துப் போயிருக்கும் மக்கள் இத்தகைய செயல்களால் இன்னும் கோபமடைந்து வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் அமைதியை ஏற்படுத்த உதவாது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அரசுத்துறை செயலாளர்கள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகிய இருவருமே நேர்மையான பொறுப்பான அதிகாரிகள் ஆவர். ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல், அமைதியை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் இன்னொரு மோதல் நடந்தால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டு விடும். அதைத் தவிர்த்து அமைதியை ஏற்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்; இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டும்.

தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப்பெற்று மக்கள் சுதந்திரமாகவும், இயல்பாகவும் நடமாட அனுமதிக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மக்களுக்கு ஆட்சியாளர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray