தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போராட்டம் அறிவிப்பு..!! போலீசார் குவிப்பு..!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளதால், மூவாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாரதிராஜா, வேல்முருகன் தலைமையில் இன்று மாலை பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, அண்ணா சிலை, உழைப்பாளர் சிலை, போர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரு கூடுதல் காவல் ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தாண்டிச் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்திலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.