தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்று ,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்!கே.பாலகிருஷ்ணன்

Published by
Venu

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைந்து மக்கள் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 100 நாட்களாக சுற்றுப் பகுதி கிராம மக்கள் அமைதியான முறையில், அறவழியில் போராடி வந்தனர்.

செவ்வாயன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற போது, போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு, தடியடி நடத்தி மக்களை விரட்டியுள்ளனர். இந்தக் கொடுமைகளின் உச்சகட்டமாக போலீஸார் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். கிசிச்சைக்காக அனுமதிக்கப் பட்டவர்களையும் கூட போலீஸார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கியுள்ளனர்.

தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புகுந்து போலீஸார் அப்பாவி பொதுமக்களை நரவேட்டையாடியுள்ளனர். ஆயிரக்கணக்கில் போலீஸாரைக் குவித்து கோரத் தாண்டவம் ஆடி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.

தாக்குதலுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவால் பின்புலத்திலிருந்து இயக்கப்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வேதாந்தா குழும முதலாளியின் எடுபிடியாக மாறிவிட்டது.

மக்களின் உயிரைக் குடிக்கும் ஆலையை மூடுமாறு கோரியதால் ஆத்திரமடைந்து முதலாளியின் மனம் குளிர சொந்த மக்களை கொலை செய்துள்ளது. தமிழகத்தில் நோக்கியா உள்ளிட்ட ஆலைகளை முதலாளிகள் மூடிவிட்டுச் சென்ற போது அதிமுக அரசு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது.

ஆனால் தற்போது எங்கள் உயிருக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்று கோரி மக்கள் போராட்டம் நடத்தினால் காக்கை குருவிகளை போல சுட்டுத் தள்ளுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உடனடியாக மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுமாறு கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியுள்ள ஆட்சியாளர்களை கண்டித்து ஒன்றிணைந்து போராட முன்வருமாறு என அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக் கொள்கிறோம்.”இவ்வாறு கே.பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…

7 minutes ago

அணையாமல் எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ… பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…

1 hour ago

மகரஜோதி தரிசனத்தை எங்கிருந்து காணலாம்? சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி  திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…

2 hours ago

பொங்கல் சிறப்பு பரிசு: 3186 காவலர்களுக்கு பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…

2 hours ago

மீண்டும் ‘மெகா’ ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் – தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…

3 hours ago

தங்கம் விலை ரூ.59,000ஐ நெருங்கியது… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…

3 hours ago