தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும்!அமைச்சர் ஜெயக்குமார்
எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள் என்றும் அரசுக்கு நண்பர்கள். அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும். அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.