தூத்துக்குடி அருகே அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று பார்வை
தூத்துக்குடி அருகே வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமினை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் என்ற ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெற்றது.இந்த முகாமினை செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.அவருடன் அதிமுக மாவட்ட கழக செயலாளர் செல்லப்பாண்டியன் உடனிருந்தார்.