தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உயிரிழந்த 13பேரின் உடல்கள் அங்குள்ள பிணஅறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இதில், 7பேரின் உடல்கள் மறு உடற் கூராய்வு செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 6பேரின் உடல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று உடற்கூறாய்வு செய்ப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் உ்ள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் மருத்துவமனை வளாகம் கடந்த 16 நாட்களாக பரபரப்புடன் காணப்பட்டது. வெளி நோயாளிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் உயிரிழந்த அனைவரது உடல்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. போராட்டத்தில் காயம் அடைந்த சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இயல்பு நிலை திரும்பியதையடுத்து, வெளி நோயாளிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. எனினும், குறைந்த அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…