தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை மூடஅரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்-மாவட்ட ஆட்சியர்
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக எடுக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஆலை இயங்கவில்லை என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையின் மின்சார இணைப்பு கடந்த 24 -ஆம் தேதி அன்று அதிகாலை துண்டிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுயமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும், மின்வாரியம் மூலமே பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருவதால், அந்த ஆலையை இயக்கவும் முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை பயன்பாட்டுக்காக வழங்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்