தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பேரவையில் தீர்மானம்..!!ஜி.கே.வாசன்..!
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து அதை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை இயங்கினால் அப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும்.
இச்சூழலில் தான் மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற இருப்பதால் சட்டப்பேரவையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்து அதை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்.
மேலும் தூத்துக்குடியில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களும், காவல்துறை உயர் அதிகாரியும் மக்களின் மனநிலைக்கு ஏற்ப நல்ல நடவடிக்கைகளை எடுத்து, இயல்பு நிலை படிப்படியாக திரும்ப வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்” என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்