மசாஜ் பார்லரில் வேலை செய்யும் பெண்ணுக்கு சென்னை தாம்பரம் அருகே பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த 24 வயதான அந்த இளம்பெண், சந்தோஷபுரம் பகுதியில் ஸ்பா ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இதன் உரிமையாளர்களில் ஒருவரான சாரதா என்பவரின் தம்பி சுராஜ் என்பவர், அந்த இளம்பெண்ணுக்கு நாள்தோறும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து, சாரதாவிடம் முறையிட்டபோது, அந்த பெண்ணை எச்சரித்ததோடு, ஸ்பாவின் மற்றொரு உரிமையாளரான செல்வம் என்பவரோடு சேர்ந்து தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, சேலையூர் காவல் நிலையத்தில் அந்த அளித்த புகாரில், பாலவாக்கத்தைச் சேர்ந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர். சாரதா மற்றும் அவரது தம்பி சுராஜ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.