தூத்துக்குடியில் 450 கிலோ அரிய வகை கடல் அட்டைகள் சீனாவிற்கு கடத்தல்…!!!

Default Image

தூத்துக்குடியிலிருந்து  450 கிலோ அரிய வகை கடல் அட்டைகள்  சீனாவுக்கு கடத்த இருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் பகுதிகளின் வழியாக கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக  மரைன் போலீசாருக்கும்,வனத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இந்த தகவலை கொண்டு களமிரங்கிய மரைன் போலீசார் தூத்துக்குடி முத்தரையர் காலனி பகுதியில் இன்று அதிகாலை  மரைன் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக ஒரு படகில் இருந்து ஆம்னிவேனில் சந்தேகப்படும் படியாக சாக்குமூடைகளை சிலர் ஏற்றினர்.இதனை கண்காணித்த அதிகாரிகள் அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

Related image

கடத்தல்கார்கள் தப்பியோடினாலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் பூபாலயராயபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (36) என்பவரை மரைன் போலீசார் மடக்கு பிடித்ததில் அவர் மட்டும் சிக்கினார். இந்நிலையில் கடத்தலுக்கு பயன்பட்ட ஆம்னி வேனையும்,அதில் பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகள் கொண்ட 4 மூட்டைகளில் இருந்த 240 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகளையும் மரைன் போலீசார் மற்றும் வனத்துறையினர் இருவரும் கூட்டாக பறிமுதல் செய்தனர்.இந்த கடத்தல் தொடர்பாக விசாரனை நடத்தியதில் கடல் அட்டைகள் கடல் வழியாகவே இலங்கை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு கடத்தப்பட இருந்தாக போலீசாருக்கு தெரியவந்தது.ஆண்மை விருத்திக்கான மருந்துகள் இந்த கடல் அட்டைகள் மூலமாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Image result for கடல் அட்டைகள்

இந்த கடல் கடத்தல் அரங்கேறியது மட்டுமல்லாமல் மற்றொரு கடத்தலும் நிகழ்ந்துள்ளது. இந்த கடத்தலானது தூத்துக்குடி சிப்காட் போலீசார் எஸ்ஐ சதீப் நாராயணன் தலைமையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.கிடைத்த ரகசய தகவலின் அடிப்படையில் முத்தம்மாள் காலனி மற்றும் ஆதிபராசக்தி நகரில் உள்ள வீட்டில் சோதனையிட்டனர். சோதனையிட்ட போது தான் அங்கு மூட்டை மூட்டையாக சாக்குமூட்டைகளில் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகள் பதுக்கி கடத்தலுக்கு வைத்திருப்பது தெரியவந்தது.

Image result for கடல் அட்டைகள் கடத்தல்

இந்நிலையில் இதையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 210 கிலோ எடையிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இவற்றின் மதிப்பு பல லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அந்த வீட்டில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபர்கள் மற்றும்  வீட்டை வாடகைக்கு எடுத்த நபர் ஆகியோர் தலைமறைவாகி பதுங்கி விட்டனர் தலைமறைவான கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலுக்கு வைத்திருந்த கடல் அட்டைகளை அவற்றை மன்னார் வளைகுடா வன உயிரின பாதுகாப்பு பிரிவு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.  ஒரே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 2 இடங்களில் தடை செய்யப்பட்ட அரிய வகை உயிரினமான கடல் அட்டைகள் கடத்தல் பறிமுதல் செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்