தூத்துக்குடி பிரைண்ட் நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் சந்தாணம். இவரது மனைவி மாலதி (வயது 24). இவர்களுக்கு ஆனந்தகுமார் (3) என்ற மகனும், இந்துமதி(2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சந்தாணம் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மாலதியை காணவில்லை. மேலும் 2 குழந்தைகளும் மாயமாகியிருந்தனர். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தாணம் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதி எங்கு சென்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி ஜார்ச் ரோட்டை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் அபர்ணா (19). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா என விசாரணை நடத்தி அபர்ணாவை தேடி வருகின்றனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…