தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் தொடரும் சோகம்!உயிரிழப்பு 10 ஆக உயந்தது!
ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 10 உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.10 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்னிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. மேட்டுப்பட்டி கிளாஸ்டன், தூத்துக்குடி கந்தையா, குறுக்குச்சாலை கிராமம் தமிழரசன், ஆசிரியர் காலனி சண்முகம், அந்தோணி ராஜ் மற்றும் தூத்துக்குடி தாமோதர் நகர் மணிராஜீம் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கல்வீச்சில் 20 போலீஸ் உள்பட 65 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.