தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று 68–வது நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகேயும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சில்வர்புரம் பகுதியில் பாளையாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் காற்றில் மாசு கலந்து இருப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாத நிலை இருப்பதாக கூறி நேற்று முகமூடி(மாஸ்க்) அணிந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதே போன்று பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், 3–வது மைல், முருகேசன்நகர், மாதவன்நகர், தபால் தந்தி காலனி, சோரீஸ்புரம் உள்ளிட்ட 16 இடங்களில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஸ்டெர்லைட் ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது .
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…