தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும்!ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் அதிரடி கருத்து
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது தற்காலிகமாக தான் மூடப்பட்டுள்ளது, ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.