தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பிரையன்ட் நகர் 4 ஆவது தெரு , மேற்கு பகுதியில் குடிநீர் பைப் உடைந்து குடிநீர் வெளியே வீணாக செல்கின்றது.இது குறித்து அந்த பகுதி மக்களிடம் கேட்டபோது இரண்டு மாதங்களாக தண்ணீர் வீணாக போய் கொண்டுதான் இருக்கிறது என்றனர்.மாநகராட்சி நிர்வாகம் வீணாகும் குடிநீரை பற்றி அக்கறை எடுக்கவில்லை எனவே இதை கண்டுக் கொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் விட்டு விட்டது என்றனர்.
இந்நிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டியும் , 2 மாதமாக குடிநீர் உடைப்பை கண்டுகொள்ளாமல் இருந்த தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்தும் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
அதை தொடர்ந்து இன்று காலை 11.45 மணியளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் MS.முத்து தலைமையில் மீன் பிடிக்கும் போராட்டம் நடத்த அனைவரும் கையில் தூண்டிலை வைத்துக் கொண்டு சென்றனர். அப்போது அதை அறிந்து மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இரண்டுமாதம் கண்டுகொள்ளமல் விட்ட குடிநீர் உடைப்பு குழாயை சரி செய்ய ஆட்களை அனுப்பி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
DINASUVADU
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…