” தூத்துக்குடியில் வாலிபர்கள் நூதன போராட்டம் ” மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை..!!

Default Image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பிரையன்ட் நகர்  4 ஆவது தெரு , மேற்கு பகுதியில் குடிநீர் பைப் உடைந்து குடிநீர் வெளியே வீணாக செல்கின்றது.இது குறித்து அந்த பகுதி மக்களிடம் கேட்டபோது இரண்டு மாதங்களாக தண்ணீர் வீணாக போய் கொண்டுதான் இருக்கிறது என்றனர்.மாநகராட்சி நிர்வாகம் வீணாகும் குடிநீரை பற்றி அக்கறை எடுக்கவில்லை எனவே இதை கண்டுக் கொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் விட்டு விட்டது என்றனர்.

இந்நிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டியும் , 2 மாதமாக குடிநீர் உடைப்பை கண்டுகொள்ளாமல் இருந்த தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்தும்  இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  தேங்கி  கிடக்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

அதை தொடர்ந்து இன்று காலை 11.45 மணியளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் MS.முத்து தலைமையில் மீன் பிடிக்கும் போராட்டம் நடத்த  அனைவரும் கையில் தூண்டிலை வைத்துக் கொண்டு சென்றனர். அப்போது  அதை அறிந்து மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இரண்டுமாதம் கண்டுகொள்ளமல் விட்ட குடிநீர் உடைப்பு குழாயை சரி செய்ய ஆட்களை அனுப்பி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அதை தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர தலைவர் முத்துகிருஷ்ணன் , மாநகர நிர்வாகிகள் காஸ்ட்ரோ ,ஆறுமுகம் , அருண் ,ஸ்மார்ட் சேகர் , கார்த்திக், நாகராஜ் , பாலா ,ஜேம்ஸ் , பாலசுப்பிரமணியன் ,முத்துராஜா , ஆவுடையப்பன் மற்றும் ஏராளமானோர்  பங்கேற்றனர்.இந்த போராட்ட அறிவிப்பை கேட்டதும் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு மாதம் கண்டுகொள்ளாமல் விட்ட குடிநீர் குழாய்யை சரி செய்வதை அப்பகுதி மக்கள்  மிகவும் வியப்புடன் பார்த்தனர்.அது மட்டும் இல்லாமல் அப்பகுதி மக்களிடையே இந்த போராட்ட அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்