தூத்துக்குடியில் யார் உத்தரவின் பேரில் போலீஸ் ரெய்டு நடைபெறுகிறது?பிருந்தா காரத் கேள்வி

Published by
Venu

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பெரிய கூட்டத்தை எதிர்பாராத காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முற்பட்ட போது காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர் ஆயுள் கைதி ஒருவரையும் கொலை செய்ததாக தகவல் வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறி ஆண்கள், இளைஞர்கள்,பெண்கள் என அனைவரையும் கைது செய்து வந்தது.

எனவே துப்பாக்கி சூட்டை கண்டித்தும் துப்பாக்கி சூடை நடத்திய அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணியும்,பொதுக்கூட்டமும் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினர்.ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் ஆகஸ்ட் மாதம் வரை எந்த ஒரு அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மனித உரிமை மீறலை கண்டித்தும் பேரணி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரியும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் தா.ராஜா தலைமையில் நடைபெறுகிறது.இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினறுமான பிருந்தாகாரத் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன்,புறநகர் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை ஆகியோர் வகிக்கின்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்.கே.பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ .வாசுகி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜூனன் வரவேற்புரை மற்றும் முடிவுரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  பிருந்தாகாரத் கூறுகையில்,

தூத்துக்குடியில் போலீஸ் அச்சுறுத்தலால் ஆண்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டதாகவும், அப்பாவிகள் மீது போலீஸ் பொய் வழக்கு போடுவதாகவும்  கூறியுள்ளார். யார் உத்தரவின் பேரில் போலீஸ் ரெய்டு நடைபெறுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago