தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது!ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ,தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட சமூகத்தின் அனைத்து தரப்பிலும் உதவ வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.