தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்து கொள்ள உணவுப் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது.
https:/safewataerfssai.gov.in/cleanwater/home என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி குடிநீர் பாட்டில், பாக்கெட், கேனில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் திஷிஷிகிமி எண்ணை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம் மற்றும் ஒரு வருட பரிசோதனை அறிக்கை, ஐ.எஸ்.ஐ. தரம், உணவுப் பாதுகாப்பு துறையின் FSSAI எண், காலம் (வேலிடிட்டி) போன்றவற்றை பொதுமக்கள் தெரிந்து கொண்டு குடிநீரின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு குடிநீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும், அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ. எண் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை திஷிஷிகிமி எண் இரண்டையும் பதிவிடப்பட்டு இருக்கும். அதில் ஏதேனும் ஒரு எண்ணை இந்த இணையதளத்தை பயன்படுத்தி அதில் குடிநீர் நிறுவனத்தின் பெயரை பதிவேற்றம் செய்தால், அந்த நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ. தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உரிமம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், அந்த நிறுவனத்தின் தண்ணீர் ஆய்வக அறிக்கையையும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இது குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தாலோ, உணவு தொடர்பான புகார்கள் இருந்தாலோ 94440– 42322 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம். 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் அதன் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் ஐ.எஸ்.ஐ. மற்றும் திஷிஷிகிமி எண் இல்லை என்றால் அது போலியானது. அது தொடர்பாக உடனே புகார்களை தெரியப்படுத்தலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.