தூத்துக்குடியில் தொடர்ந்து அத்துமீறும் காவல்துறை ! நீதிபதி கண்டனம்..!

Default Image
தூத்துக்குடி காவல்துறையின் அராஜகம்…

தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் சட்டவிரோதமாக சிறார்களும் இளைஞர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் இந்தப் பிரச்சனை குறித்து அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

காவல் நிலையங்களை ஆய்வு செய்ய மாவட்ட தலைமை நீதிபதி விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் அவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. வழக்கறிஞர்கள் சங்கம் சொன்னதன் அடிப்படையில் விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அவர் செல்லும் போது சட்டவிரோதமாக அங்கு யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. தனக்கு வந்த தகவலின் அடிப்படையில் விசாரித்த பிறகு அங்கிருந்தவர்களை எல்லாம் மேஜிஸ்திரேட் வருவதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு வல்லநாடு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வல்லநாடு காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். 94 பேர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.Image result for தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் புகைப்படம்

அதன் பிறகு அவர்களெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

30க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள், அவர்களெல்லாம் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இதர இளைஞர்களுக்கு அவர்களின் உடம்பிலுள்ள காயங்களெல்லாம் பதிவு செய்யும் பணி நடந்தது.

மாவட்ட தலைமை நீதிபதி நீதிமன்றத்தின் அருகிலுள்ள தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்திற்கு தானே நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் சட்டத்திற்கு புறம்பாக அங்கும் 40க்கும் மேற்பட்டோர் அடைத்து வைத்திருப்பதை அவர் பார்த்து கடிந்து கொண்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சொன்னதாகவும் தகவலிருக்கிறது.

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் மாவட்ட தலைமை நீதிபதிக்கும் பாராட்டுக்கள். இத்தகைய நடவடிக்கைகள் தூத்துக்குடி மாநகர மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

எல்லா அமைப்புகள் மீதும் நம்பிக்கையிழந்து எதிரிகளால் சூழப்பட்டதுபோல மனநிலையிலிருக்கும் மக்களுக்கு இது ஒரு ஆறுதல்.Related image

மேலும் சில  இடங்களில் காவல்துறை இரவில் சென்று தேடுதல் வேட்டை என்கிற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து சிறியோர் பெரியோர் என்று பாராமல் எல்லாரையும் கைது செய்து வேறு பல பகுதிகளில் அடைத்து வைத்திருப்பதாகவும், மேலும் சில அமைப்பை சேர்ந்த சிலரை காணவில்லை எனவும் தகவல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்