தூத்துக்குடியில் தொடரும் உயிர்பலி!போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்றாவது நபர் உயிரிழப்பு!

Published by
Venu

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று பேர் பலியாகினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதேபோல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் போலீஸ் வேனை கவிழ்த்ததோடு, போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகளில் சேதம் ஏற்பட்டது. அதேபோல போராட்டக்காரர்கள் மீது போலீசாரும் தடியடி நடத்தினர். தொடர்ச்சியாக பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடியில் துரத்தியதால் போலீஸ் ஓட்டம் பிடித்தனர். காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை வீசியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவல்துறையினர் – போராட்டக்காரர்கள் இடையே ஸ்டெர்லைட் போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். தற்போது மேலும், இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 15 பேர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தகவல் வெளியாகியுள்ளது.மேலும்  துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் உசிலம்பட்டி ஜெயராமன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

2 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

3 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

3 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

3 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

4 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

4 hours ago