தூத்துக்குடியில் தூள் கிளப்பப் போவது யாரு…. கனிமொழியா ? தமிழிசையா ?
- ” யார் போட்டியிட்டாலும் சாதிக்க தயாராக இருக்கிறோம்.” கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும், தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜனும் வேட்பாளராக நிற்கின்றனர். தூத்துக்குடி தொகுதியில் யார் ஜெயிக்க போவது என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சி தலைவர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் வேட்பாளராக நிற்கும் கனிமொழிக்கு இது தான் முதலாவது தேர்தல். கனிமொழியிடம், தமிழிசை போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்க்கு பதிலளித்த கனிமொழி ” யார் போட்டியிட்டாலும் சாதிக்க தயாராக இருக்கிறோம்.” கூறியுள்ளார்.