தூத்துக்குடியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணியில் பள்ளி ,கல்லூரி மானவார்கள் ..!

Published by
Dinasuvadu desk

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.Image result for தூய்மை இந்தியா இயக்கம்

நோயினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது, ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் அரசு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஆரோக்கியமாக வாழ முடியும். சுகாதாரம் குறித்து உங்களது நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தொடர்ந்து பொது மக்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்.

பின்னர் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 30 மாணவர்கள், செவிலியர் பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள், 20 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் குலையன்கரிசல் கிராமத்தில் வீடு, வீடாக சென்று சுகாதாரப்பணிகளை மேற்கொண்டனர்.

 

இதில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லலிதா, துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, நலக்கல்வியாளர்கள் கணேசன், சங்கரசுப்பு, சமூகம் சார்ந்த மருத்துவத்துறை மருத்துவர்கள் சார்லஸ் பொன் ரூபன், ராஜசேகர், சமூக நல பணியாளர் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

3 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

4 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

5 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

5 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

6 hours ago