தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது.
கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது.சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி.மாரிராஜா தலைமையில் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100 பேர் தூத்துக்குடி வந்தடைந்துள்ளனர்.இவர்கள் வன்முறை நடந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களில் தடயங்களை சேகரிக்கவும் உள்ளனர்.இவர்கள் தலா 10 பேர்களை கொண்ட குழு 10 ஆக பிரிந்து வட்டாட்சியர்கள்,போலீசார்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…