தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி..!

Published by
Dinasuvadu desk

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து கண்டன பேரணியும் ,பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு.

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பெரிய கூட்டத்தை எதிர்பாராத காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முற்பட்ட போது காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர் ஆயுள் கைதி ஒருவரையும் கொலை செய்ததாக தகவல் வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறி ஆண்கள், இளைஞர்கள்,பெண்கள் என அனைவரையும் கைது செய்து வந்தது

எனவே துப்பாக்கி  சூட்டை கண்டித்தும் துப்பாக்கி சூடை நடத்திய அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணியும்,பொதுக்கூட்டமும் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினர்.ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் ஆகஸ்ட் மாதம் வரை எந்த ஒரு அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மனித உரிமை மீறலை கண்டித்து பேரணி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது அதில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

 

Recent Posts

உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 10 மாவட்டங்களில் கனமழை!

உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 10 மாவட்டங்களில் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை…

8 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல் – டைரக்டரால் உண்மை வெளிவரும் தருணம் ..முத்து என்ன செய்தார் தெரியுமா?.

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில்  இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்.. உண்மையை மறைக்கு மனோஜ்…

13 mins ago

ஸ்பேஸ் X உதவியுடன் 4700 கிலோ எடையுள்ள GSAT N2 ஏவப்பட்டது!

ஃபுளோரிடா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ GSAT N2 என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் தகவல்…

17 mins ago

‘தி கோட்’ வசூலை பீட் செய்த ‘அமரன்’.. புதிய அத்தியாயத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'அமரன்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்து…

45 mins ago

இந்தி மயமான LIC! வெளியான புது விளக்கம்!

டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு…

1 hour ago

“சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”…இத்தாலி பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி!

ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 19-வது ஜி20 உச்சி மாநாடானது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ…

2 hours ago