தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி..!

Default Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து கண்டன பேரணியும் ,பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு.

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பெரிய கூட்டத்தை எதிர்பாராத காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முற்பட்ட போது காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர் ஆயுள் கைதி ஒருவரையும் கொலை செய்ததாக தகவல் வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறி ஆண்கள், இளைஞர்கள்,பெண்கள் என அனைவரையும் கைது செய்து வந்தது

எனவே துப்பாக்கி  சூட்டை கண்டித்தும் துப்பாக்கி சூடை நடத்திய அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பேரணியும்,பொதுக்கூட்டமும் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரினர்.ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் ஆகஸ்ட் மாதம் வரை எந்த ஒரு அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மனித உரிமை மீறலை கண்டித்து பேரணி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது அதில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்