தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!

Published by
kavitha

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் தொடங்கிய கலவரம் 2வது நாளாக நேற்றும் நீடித்தது. இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவம் வரவழைக்கப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக  மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம்  மற்றும் காவல்துறை அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தடையை மீறி போராட்டக் குழுவினர்   ஆயிரக்கணக்கானோர் நேற்று  முன்தினம் காலையில் தூத்துக்குடி பீச்ரோடு பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.  அவர்களை ஆங்காங்கே போலீசார் தடுத்தபோது  மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.

எனினும் போராட்டக் குழுவினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். இதனால் 3வது மைல் பைபாஸ் சாலையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி  சூடு மற்றும் தடியடியில் 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவங்களால் தூத்துக்குடியே போர்க்களமானது. ஒரு வழியாக மாலை 4 மணிக்கு கலவரம் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கவும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை பார்க்கவும் உறவினர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு திரண்டு  வந்தனர்.

இதன் காரணமாக மருத்துவமனைக்கு வந்த  பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார்  அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசார்  மீது கல்வீசி தாக்கினர். அப்போது திடீரென்று பெட்ரோல் குண்டு  வீசப்பட்டது.  இதனையடுத்து போலீசார் பாளை. ரோடு, விவிடி சிக்னல், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

போலீசார் மீண்டும், ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கி சூடு நடத்தி  இளைஞர்களை  விரட்டினர். இந்த துப்பாக்கி சூட்டில் தாளமுத்துநகர் ஆசைதம்பி நகரை  சேர்ந்த காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலியானவர்கள்  எண்ணிக்கை  11 ஆக உயர்ந்தது. ஜெயராமன் என்பவர் நேற்று மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது குண்டடிபட்டு காயமடைந்தார். இவர் தூத்துக்குடி  அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திங்கள்

Recent Posts

விடாமுயற்சியை கண்டு ஒதுங்கிய தனுஷ் படம்! புது ரிலீஸ் தேதி இது தான்!

சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…

7 hours ago

2025 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? லேட்டஸ்ட் தகவல் இதோ!

டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…

8 hours ago

ரிங்கு சிங்கிற்கு விரைவில் திருமணம்? பொண்ணு இந்த கட்சியின் அரசியல்வாதியா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…

9 hours ago

“திமுகவின் ஆணவ அரசியலை எதிர்த்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார்”…ராஜேந்திர பாலாஜி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…

10 hours ago

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்!

சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…

10 hours ago

“ரோஹித் சர்மா யார் என்று அந்த ஒரு தொடர் முடிவு செய்துவிட முடியாது”..ஆதரவாக பேசிய யுவராஜ் சிங்!

மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…

11 hours ago