தூத்துக்குடியில் சோமு செம்பு அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் பிரைன்ட் நகர் 7வது தெருவில் உள்ள சுந்தரவல்லி திருமண மண்டபத்தில் வைத்து சோமு செம்பு அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை இணைந்து நடத்தும்  இலவச மருத்துவ முகம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு DYFI இரத்ததான கழகத்தின் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.இதற்கு சோமுவின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் செம்புவின் தாயார் ராஜாத்தி முன்னிலை வகித்தனர் .

இதில் மருத்துவர்கள் பி. சிவனாகரன் பொது மருத்துவர் ,பால்சாமி குழந்தை மருத்துவர்,வசந்தகுமார் குழந்தை மருத்துவர் ,பாண்டியன் கண் மருத்துவர் ,பிரகாஷ்காரத் பொது மருத்துவர் மற்றும் காயத்ரி ,ராஜாத்தி,மலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, மாநகர செயலாளர் டி.கண்ணன் ,மாநகர தலைவர் ஜி.முத்துகிருஷ்ணன், மாநகர குழு உறுப்பினர்கள் காஸ்ட்ரோ ,பாலமுருகன் ,ஆனந்தராஜ்,ஜேம்ஸ் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.அமர்நாத், மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ்பாண்டி, மாநகரச்செயலாளர் ரத்னபிரவின், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுரேஷ் ,சுலேராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்