தூத்துக்குடியில் சோபியாவை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.
பின் விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் சோபியா மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் சோபியாவை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், சோபியாவின் தந்தை சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்ய வலியுறுத்திம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…