தூத்துக்குடியில் கணவனை அடித்துக் கொலை செய்த மனைவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!

Default Image

தூத்துக்குடி 3–வது மைல் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்ற குணசேகர்(வயது 47). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லதா என்ற சகாயலதா(43). குணசேகரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார்.

கடந்த 22–2–14 அன்று வீட்டில் வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனை குணசேகரன் எடுத்து சென்றதாக கருதி, சகாயலதா மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகியோர் அவரை சத்தம் போட்டனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த சகாயலதா மற்றும் அவருடைய மகன் ஆகியோர் மண்வெட்டி கனையால் அவரை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயும், மகனும், குணசேகரன் இயற்கையாக இறந்ததாக நாடகமாடினர். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து சகாயலதா மற்றும் அவருடைய மகனையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட சகாயலதாவுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கொலையை மறைக்க முயன்றதற்காக 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகாயலதாவின் மகன் இளம்சிறார் என்பதால், அவர் மீதான வழக்கு விசாரணை இளம்சிறார் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு தனியாக நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Maharashtra Election 2024 Result
bjp bihar
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024