தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது ..!!பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்….!!
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 100 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு வெளியூர் செல்வோர் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பும் பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ளது. காமராஜர் மற்றும் வ.உ.சி. மார்க்கெட்டுகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் இருந்து காய்கறிகள் வரத்தொடங்கியுள்ளன.
நான்கு நாட்களுக்கு முன்னர், தக்காளி கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் வரை விற்ற நிலையில், வரத்து அதிகரிப்பால் தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. துண்டிக்கப்பட்ட இணைய சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்