தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும்…!ககன்தீப் சிங் பேடி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அரசின் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் கூறியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 43 பேருக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தூத்துக்குடி நகரத்தில் தற்போது 4 ஐஜி, 4 டிஜஜி, 15 எஸ்.பி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். பேராட்டக்குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் பேசிய புதிய மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் மீண்டும் சகஜ நிலை திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக கடந்த செவ்வாயன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தற்போ-து வரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடியே கொந்தளித்ததையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, டேவிட் தவிதார் ஆகியோரை அனுப்பியது தமிழக அரசு. அவர்கள் தலைமையில் தற்போது தூத்துக்குடியில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.