தூத்துக்குடியில் அத்யவாசிய பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள்..!!இணையம் தான் கட் என்றால் மாநகராட்சி தண்ணீரும் கட்..!!

Default Image

போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டால் கடந்த 3 நாட்களாக போர்க்களம் போல காட்சியளிக்கும் தூத்துக்குடி நகரத்தில் பொதுமக்களும், செய்தி சேகரிக்க சென்றுள்ள பத்திரிகையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களால் தூத்துக்குடி நகர வீதிகளும், தெருக்களும் நிறைந்துள்ளன. 144 தடை உத்தரவு காரணமாக தூத்துக்குடி நகர மக்கள் வெளியில் இயல்பாக நடமாட முடியாத சூழல் உள்ளது. இதனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மக்களும், பத்திரிகையாளர்களும் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் அதிகாரப்பூர்வமாக 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். களநிலவரங்களையும், மக்களின் துன்பங்களையும் உடனுக்குடன் செய்தியாக கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அவர்களும் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.  தூத்துக்குடியில் இருக்கும் எல்லா பத்திரிக்கையாளர்களும் கிட்டத்தட்ட தண்ணீர் குடித்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மொத்த நகரமும் செயலிழந்துவிட்டது. உணவு இல்லை, இருக்கும் தண்ணீரும் குறைந்து கொண்டே வருகிறது என கூறியுள்ளனர் இந்நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பெரும்பாலான வீடுகளில் குடிக்க தண்ணீர் கூட இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 நாட்களுக்கு முன் பிடித்த தண்ணீரை வைத்து சமாளித்து கொண்டு இருக்கிறார்கள். மாநகராட்சி தண்ணீரும் வரவில்லை, மின்சாரம் இல்லாததால் போர் தண்ணீரும் கிடையாது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்