தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்றது, கண்துடைப்பு என கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி மக்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த அச்சத்தை போக்க வேண்டும் என்றும், அந்த மாவட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
போராட்டம் திசைமாறி செல்லும் வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள தமிழிசை, போராட்டக்காரர்கள் அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பது, தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றும், போராட்டக்காரர்கள் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார். தூத்துக்குடி போராட்ட சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாகவும் தமிழிசை விமர்சித்தார்.
எதிர்கட்சிகள் இயல்பாக நடக்கும் எல்லாவற்றையும் அரசியலாக மாற்றி தமிழகத்தை போராட்ட களமாக மாற்றுவதையே வேலையாக கொண்டிருப்பதாகவும், தமிழகத்தின் ஆக்கப்பூர்மான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட வேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக் கொண்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்றுள்ளது ஆரோக்கியமானது என்றும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…