தூத்துகுடி இனையம் துண்டிப்பா..?சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்-கமல்

Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 13ஆக உயர்ந்துள்ளது.துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர்.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை – ஐந்து நாட்களுக்கு – இணைய சேவைகளை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் முடக்குவதற்கு உத்தரவிடுவதாகவும் அந்தச் சுற்றாணையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் அவரது பதிவில் தூத்துகுடி இனையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கி வைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்.!! மக்களின் வலிமையை எதிர்கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை.அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை என ட்விட் செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்