தூத்துகுடியில் “ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மக்கள் மனு”வருத்தம் அளிக்கிறது அமைச்சர் செல்லூர் ராஜூ…!!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மக்கள் மனு அளிப்பது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது .இந்நிலையில் இந்த குழு நேற்று தூத்துக்குடி வந்து சேர்ந்தது.இன்று ஆய்வை தொடங்கிய அக்குழு மக்களிடம் கருத்து கேட்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மக்கள் மனு அளிப்பது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
மேலும் ஹெச்.ராஜா இன்னும் கைது செய்யப்படவில்லையே என்ற கேள்விக்கு சட்டம் தன் கடமையை செய்யும் என்று மலுப்பலாக பதில் தெரிவித்தார்.அவதூதராக பேசியதாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அதிகாலை அவருடைய வீட்டில் அதிராடிய கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU