தூக்கு தண்டனை சரியான ஒன்றுதான் !சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்,பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து, 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவித்து அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் பல்வேறு வகை போராட்டங்கள், அழுத்தங்கள் காரணமாக நடைமுறையில் உள்ள ஆயுள் தண்டனை தூக்கு தண்டனையாக சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது என்றாலும், வயது பாராமல், பெண்ணியத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே வருங்காலங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடூர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.
எனவே பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடும் எவராயினும், அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும்” என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.