உயர்நீதிமன்றம் இன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் தஷ்வந்துக்கு தூக்குதண்டனை உறுதிசெய்தது.
சாப்ட்வேட் இன்ஜினியர் பாபு (35), போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர். இவரது மகள் ஹாசினி (7). இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மெக்கானிக் இன்ஜினியர் தஷ்வந்த் (25) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.இவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.இந்நிலையில் தஸ்வந்த் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதில் தஷ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து இவர் மீது தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்குதண்டனை உறுதிசெய்தது.
இதைத் தொடர்ந்து பேசிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்,
தூக்கு தண்டனையே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சரியாக இருக்கும். தஷ்வந்த் தூக்குக்கயிற்றில் தொங்கும் கடைசி நொடி காமத்திற்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும். தஷ்வந்த் செய்த குற்றத்திற்கு தூக்கு தண்டனையை விட வேறு தண்டனை ஈடாகாது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் திருமண வாழ்க்கையிலும் பிரச்னையை சந்திக்கிறார்கள்.ஆனால் நிரபராதியை தண்டிப்பது தவறு.ஆனால் குற்றவாளியை தண்டிக்காமல் விடுவது நீதி இல்லாதது போலாகிவிடும்.மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது.தஷ்வந்த செய்த குற்றத்தை விட, செய்ய வேண்டும் என்ற அவரது மனநிலை கொடூரமானது.குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திருமணத்தால் பிரிவதை விட கொலையால் மகளை இழந்தது கொடூரமானது என்று நீதிபதிகள் கடுமையாக பேசியுள்ளார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…