தூக்குக்கயிற்றில் தஷ்வந்த் தொங்கும் கடைசி நொடி காமத்திற்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும்!உயர் நீதிமன்ற நீதிபதிகள்

Default Image

உயர்நீதிமன்றம் இன்று  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் தஷ்வந்துக்கு தூக்குதண்டனை உறுதிசெய்தது.

சாப்ட்வேட் இன்ஜினியர் பாபு (35), போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர். இவரது மகள் ஹாசினி (7). இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மெக்கானிக் இன்ஜினியர் தஷ்வந்த் (25) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.இவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.இந்நிலையில் தஸ்வந்த் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதில் தஷ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதை தொடர்ந்து இவர் மீது தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்குதண்டனை உறுதிசெய்தது.

இதைத் தொடர்ந்து பேசிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்,

தூக்கு தண்டனையே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சரியாக இருக்கும். தஷ்வந்த் தூக்குக்கயிற்றில் தொங்கும் கடைசி நொடி காமத்திற்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும். தஷ்வந்த் செய்த குற்றத்திற்கு தூக்கு தண்டனையை விட வேறு தண்டனை ஈடாகாது.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் திருமண வாழ்க்கையிலும் பிரச்னையை சந்திக்கிறார்கள்.ஆனால் நிரபராதியை தண்டிப்பது தவறு.ஆனால் குற்றவாளியை தண்டிக்காமல் விடுவது நீதி இல்லாதது போலாகிவிடும்.மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது.தஷ்வந்த செய்த குற்றத்தை விட, செய்ய வேண்டும் என்ற அவரது மனநிலை கொடூரமானது.குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திருமணத்தால் பிரிவதை விட கொலையால் மகளை இழந்தது கொடூரமானது என்று நீதிபதிகள் கடுமையாக பேசியுள்ளார்கள்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்