3 துப்பாக்கி தோட்டாக்களை திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே போலீசார் கண்டெடுத்துள்ளனர். இன்று காலை சென்னை சென்ட்ரல் நிலையம் வந்து சேர்ந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது ஏசி வசதி கொண்ட பி2 பெட்டி, படுக்கை எண் எட்டில், சிறிய பௌச் கிடந்ததைக் கண்டனர்.
அதை திறந்தபோது, 3 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்த அவர்கள், நடைமேடை பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட தோட்டாக்கள், எஸ் எல் ஆர் ரக துப்பாக்கியின் 7.62 எம்.எம். தோட்டாக்கள் என தெரியவந்தது.
இதையடுத்து பி2 பெட்டியில் முன்பதிவு செய்து பயணித்தவர்களின் பட்டியலைக் கொண்டு, துப்பாக்கி தோட்டா குறித்து விசாரணை நடத்த அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…