துப்பாக்கி சூட்டில் இறந்த மகன் கண்ணீர்போஸ்டரைபார்க்கும் தந்தை:கல் மனதையும் கரைக்கும் புகைப்படம்..!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த தன் மகனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்தப்படி நிற்கும் அவரின் தந்தையின் புகைப்படம் ஒன்று காண்பாேரை கண் கலங்க செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டதின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் காயமடைந்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் துாத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த இளைஞர் மணிராஜூம் ஒருவர். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி முழுவதும் மணிராஜின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவரது தந்தை செளந்திரபாண்டி கண்ணீருடன் பார்க்கும் போட்டோ ஒன்று பேஸ்புக், போன்ற சமூகவலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வாழ வேண்டிய வயதில் மகன் தன்னை விட்டு பாேய்விட்டான் என்ற ஏக்கமும், கண்ணீருமாக அவர் நிற்கும் புகைப்படத்தை பார்க்கும் அனைவர் கண்ணிலும் கண்ணீர் வரவைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.